"ஹலோ தலைவரே, பா.ம.க. ராமதாஸ், தே.மு.தி.க. பிரேமலதா, ஓ.பி.எஸ். மூன்று பேரும் தங்களுக்கான கூட்டணி எதுவும் கிடைக்காமல் அல்லாடிக்கிட்டு இருக்காங்களாமே?''”  

Advertisment

"அப்படியா சொல்ற.. நீயே முழு விவரத்தையும் சொல்லிடு.''”

"அ.தி.மு.க. கூட்டணிக்குள்ளே அன்புமணி சேர்ந்துட்டதால, அ.தி.மு.க.வை உதறிட்டாரு அய்யா ராமதாஸ். தி.மு.க. கூட்டணிக்குப் போக, ஜெகத்ரட்சகன் மூலமா முயற்சி செஞ்சாரு. ஆனா, பா.ம.க. இருக்கும் கூட்டணியில வி.சி.க. இருக் காதுன்னு திருமா அதிரடியா சொன்னதால ராமதாஸை வெயிட்டிங்ல வெக்கலாம்னு ஸ்டாலின் சொல்லிட்டாராம். இந்த விசயத்தை கேட்டு ராமதாஸ் அப்செட்! இப்போ அவரோட பார்வை விஜய்யின் த.வெ.க. பக்கம் திரும்பியிருக்கு. பிரேமலதாவின் எதிர்பார்ப்பு ஏகத்துக் கும் இருக்கிறதினால அவரையும் எந்த கூட்டணியிலும் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க … 40 சீட், 2 ராஜ்யசபா சீட், மத்திய அமைச் சர் பதவி, தேர்தல் செலவுக்கு பணம் என ஏகத்துக்கும் அடுக்கிக்கிட்டே போனதால, அ.தி.மு.க.- பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தே.மு.தி.க.வை வெயிட்டிங் லிஸ்ட்ல வெச்சிட்டாங்க. ஒன்னரை பெர்சண்டேஜ் வோட் வெச்சிக்கிட்டு இந் தளவுக்கு எதிர்பார்க்கி றாங்க அந்த அம்மா (பிரேமலதா). அவங்க கோரிக்கைய நிறை வேத்துற அளவுக்கு நம்மகிட்டே சக்தி இல்லேன்னு கமெண்ட் அடிச்சிருக்காரு எடப்பாடி. இதனால, எந்த கட்சியும் நம்மளை சீண்டலயே என ரொம்பவும் மன உளைச்சல்ல இருக்கிறாராம் பிரேமலதா. இருந் தாலும் தன் முயற்சியைக் கைவிடாத விக்ரமாதித் யன் மாதிரி, தொடர் முயற்சியா அடுத்த ரவுண்டை ஆரம்பிச்சிருக்கும் பிரேமலதா, இந்த முறை தன்னோட எதிர்பார்ப்புல சிலபல மாற்றங்களைச் செஞ்சிருக்கிறாராம். இப்படி இவங்க அல்லாடிக் கிட்டு இருக்கிறப்போ, அய்யா ராமதாஸின் அனுமதியோட விஜய்க்கு நெருக்கமானவரான தனது மகன் தமிழ்க்குமரன் மூலமா விஜய்யிடம் பேசியிருக்கிறாராம் ஜி.கே.மணி. அதுக்கு விஜய், எங்க கூட்டணிக்கு அய்யா வர்றது சந்தோசம்தான். நிர்வாகிகள்ட்ட பேசிட்டுச் சொல்றேன். காங்கிர ஸும் நம்மகூட பேசிக்கிட்டுத்தான் இருக்கு. அவங்க ளோட முடிவுதெரிஞ்சதும் சொல்றேன் எனச் சொல்லியிருக்காரு. அதனால, ராமதாசும் வெயிட்டிங்''”

Advertisment

"ஓ.பி.எஸ்.ஸும் கூட்டணி கிடைக்காமத்தான் அல்லாடிக்கிட்டு இருந்தாரு. இப்போ, அவரை த.வெ.க.வுல சேர்த்துக்க ரெடி யாய்ட்டாங்களாமே?''” 

"ஆமாம் தலைவரே, அதாவது, என்.டி.ஏ. கூட்டணியில தினகரனை இணைச்சதும், நம்மளையும் சேர்த் திடுவாங்கன்னு ரொம்பவுமே எதிர் பார்த்தாரு ஓ.பி.எஸ். ஆனா, ஏமாற்றம்தான். அதே மாதிரி மோடி கலந்துக்கிட்ட மதுராந்தக பொதுக்கூட்ட மேடை யில தனக்கும் இடம் கிடைக்கும்னு நினைச்சாரு. அதுலயும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏமாற்றம்தான். இதைத் தாங்கிக்க முடியாம, அமித்ஷாவுக்கு ஓ.பி.எஸ். போன் அடிச்சிருக்காரு. அவரது போனை அட்டெண்ட் பண்ணலையாம். இதனால அப்செட்டான ஓ.பி.எஸ்., த.வெ.க. கூட்டணிக்கு செங்கோட்டையன் மூலமாக பகீரத முயற்சிசெய்ய, இப்போ க்ரீன் சிக்னல் கிடைச்சிருக்கு. இந்த விசயத்தை தெரிஞ்சிக்கிட்ட அமித்ஷா, ஓ.பி.எஸ். ஸுக்கு போனைப் போட, இப்போ ஓ.பி.எஸ். அட் டெண்ட் பண்ணலை. த.வெ.க. கூட்டணிக்குப் போகிறோம்னு ஓ.பி.எஸ். ஸே சொல்லுவாருன்னு அவருக்கு நெருக்கமான வங்க சொல்றாங்க. த.வெ.க. கூட்டணியில ஓ.பி.எஸ்.ஸுக்கு இடம் கிடைச்சாலும் அவரு இந்த முறை தேர்தல்ல நிக்கமாட்டாரு. தன்னை நம்பியுள்ள சிலருக்கு சீட் வாங்கிக்கொடுப்பாரு. அவங்க விசில் சின்னத்துல போட்டிபோடுவாங்கன்னு சொல்றாங்க. அதேசமயம் இன்னொரு சோர்ஸ், சேகர்பாபு தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸிடம் பேசிக்கொண்டிருக் கிறார். ஓ.பி.எஸ்.ஸை தங்கள் 
பக்கம் இழுத்து தி.மு.க. சர்ப்ரைஸ் கொடுக்கும்னும் சொல்லுது.''”

Advertisment

"நாம சொன்ன மாதிரியே, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வழக்கறிஞர் சையது புர்ஹானை த.வெ.க. அழைச்சுக் கிட்டிருக்கே?''

"ஆமாங்க தலைவரே, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் சையது புர்ஹானுக்குத்தான் வாய்ப்பிருந்தது. ராகுல் காந்தியால் பெருமைப்படுத்தப்பட்ட அவருக்கு கடைசி நேரத்தில் தலைவர் பதவி கொடுக்கப்பட வில்லை. இதனால் அதிருப்தியில இருந்தார். அவரை த.வெ.க.வுக்கு கொத்திச்செல்ல அக்கட்சி யினர் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங் கன்னு நாம பேசிக்கிட்டோம். அதேமாதிரியே, அவரை த.வெ.க. அழைத்துக்கொண்டது. காங் கிரஸிலிருந்து விலகி, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தனது ஆதரவாளர்களோடு த.வெ.க.வில் இணைந்து விட்டார் சையது புர்ஹான். இவரைப்போல, மாவட்ட தலைவர் பதவி கிடைக்காததில் அதிருப்தியடைந்துள்ள தமிழக காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் பலரும் த.வெ.க.வுக்கு தாவத் தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்யச் சொல்லி சையது புர்ஹா னுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இவருக்கு செல்வாக்கு இருப்ப தால் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தருவதாக விஜய் உறுதிகொடுத்துள்ளார்.''

"சென்னை மாநகராட்சியில தூய்மைப் பணிகளை காண்ராக்ட் விட்ட விஷயம் விவகாரமாகும்னு சொல்றாங்களே?''”

"இந்த காண்ட்ராக்டிற்காக வடக்கு, மத்தி, தெற்கு என மூன்று மண்டலங்களாக சென்னை பிரிக்கப்பட்டு காண்ட்ராக்ட் விடப்பட்டது. இந்த காண்ட்ராக்டை எடுத்தவங்க மிக முக்கியமானவங் களுக்கு வேண்டப்பட்டவங்களாம்.  விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாகும்னு மாநக ராட்சியில் எதிரொலிக்குது.''”  

rang1

"கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் விவகாரத்துல அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கருத்து வேறுபாடு வந்திருக்காமே?''”

"கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜனவரி 12-ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றவர் தங்கதுரை. கடந்த 2025, பிப்ரவரி நான்காம் தேதி, மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவர் தினேஷ்குமார். "மாவட்ட எஸ்.பி.யான தங்கதுரை உணவுத்துறை அமைச்ச ரான சக்கரபாணியின் மைத்துனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருப்பவர் உணவுத்துறை அமைச்சர். தேர்தலின்பொழுது இவரே எஸ்.பி.யாக இருந்தால் தி.மு.க.வுக்கே சாதகமாக இருக்கும். மாவட்ட கலெக்டராக இருக்கும் தினேஷ்குமார், தி.மு.க.  மா.செ. மதியழக னுடன் நெருக்கமாக இருக்கின்றார். ஆகவே இவர்கள் இருவரையும் உடனடியாக மாற்றவேண் டும்' என அ.தி.மு.க. போர்க்கொடி தூக்க, "யாராக இருந்தாலும் பிரச்சினை யை சரிசெய்து கொடுக் கிறார்கள் இருவரும். கட்சி வேறுபாடு பார்ப்ப  தில்லை. அவர்கள் இருந் தால்தான் நல்லது. அவர்களை மாற்ற வேண் டாம்' என மாவட்ட அதி காரிகளுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது பா.ஜ.க.''”

"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல போக்குவரத் துக் கழகத்தில் சாதீய வன்கொடுமைகள் நடந்தேறிவருகிறதாமே?'' 

"ஆமாம், மேட்டுப்பாளையம் பணிமனை யைப் பொறுத்தவரை டிரைவரும், கண்டக்டருமாக 43 நபர்கள் பணியாற்றிவருகின்றனர். ஆதிக்க சாதி யினரே இந்தப் பணிமனையை இயக்கிவருகின்றனர். பொதுவாக, டிராபிக் கண்ட்ரோல் பார்ப்பவர்தான் இவர்களுக்கான டூட்டியை வரையறுப்பது வழக்கம். பணிமனை மேலாளராக வருபவர் அதற்கு ஒத்துழைப்பார். ஆதிக்க சமூகத் தினருக்கு மட்டும் அருகிலேயே டூட்டியை வழங்குபவர்கள், பட்டியல், பழங்குடி மக்கள் என்றால் தொலைதூர டூட்டியை வழங்கி வஞ்சிப்பார்கள். கடந்த சில மாதங் களில் பட்டியல் சமூகத்தினரை சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ் ஆகியோர் இங்கு பணிமனை மேலாளராகப் பணியாற்ற வர, இவர்கள் கொடுத்த குடைச்சலால் ஒருவர் 20 நாட்கள், இன்னொருவர் 15 நாட்களே இங்கு வேலைபார்த்தனர். அதன்பின் இடமாற்றலாகினர். இதனைவிடக் கொடுமை என்னவென்றால், "முன்பு இங்கு பணிசெய்தவர்கள் பட்டியலின அதிகாரி கள். புதிதாக வருபவர் நம்முடைய சாதி. ஆதலால், அவர்கள் இருந்த இடத்தை சாணிபோட்டு மெழுகிவிட்டு, "புதிய அதிகாரியை வரவேற்போம்' என அரசு அலுவலகத்தையே சாணிபோட்டு மெழுகி சாதிய வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளது ஆதிக்க சாதி அதிகாரிகள் தரப்பு. அந்த டெப்போவிலுள்ள அனைவரும் சஸ்பெண்ட் ஆகலாம் என்கிறது மாவட்ட நிர்வாகம்.''”

"சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருக்கும் கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்குகிறாராமே எடப்பாடி?''”

"அப்படித்தான் பேச்சு அடிபடுது. பா.ஜ.க. வின் மாநில துணைத்தலைவராக இருக்கும் ஜெயப் பிரகாஷுக்கு துறைமுகம் தொகுதி கேட்கப்பட்டி ருக்கிறது. இதே தொகுதியில்தான் சேகர்பாபுவும் போட்டியிடுகிறார். அதேபோல கொளத்தூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. வேளச்சேரி தொகுதியில் தமிழிசை. மயிலாப்பூர் தொகுதியில் பேராசிரியர் கனகசபாபதி என்பவ ருக்கு குருமூர்த்தி சிபாரிசு செய்திருக்கிறார்.''”

"பா.ஜ.க.வில் எம்.எல்.ஏ. சீட் ரேட் உயர்ந்திருக்கிறதாமே?''”.

"கட்சிக்குத் தொடர்பில்லாத வியாபாரியாக இருந்தால் எம்.எல்.ஏ. சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய், கட்சிக்காரர் என்றால் இரண்டு கோடி ரூபாய் பிக்ஸ் செய்திருக்கிறார்களாம். இவையெல் லாமே நயினார் நாகோந்திரன் மகன் நயினார் பாலாஜி பேசிக்கொண்டிருக்கும் ரேட். தி.நகர் தொகுதியை ஹெச்.ராஜாவும், தமிழிசையும் எடப் பாடியிடம் தனக்கே ஒதுக்கவேண்டுமென தாஜா செய்துகொண்டிருக்கின்றனர். இது போக, அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ் பி செல்வம், எஸ்.ஜி.சூர்யா ஆகியோ ரும் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.''”

"நானும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்றேன்... தி.மு.க. கூட்டணி வேணாம், விஜய் கட்சிகூட கூட்டணி வச்சிக்கலாம்னு காங்கிரஸ் தரப்பில் சிலர் வெளிப்படையா பேசியதில் தி.மு.க.வினர் அவங்க மேல கோபத்தில் இருந்தாங்க, ஆனாலும் வெளிக் காட்டிக்கல. இந்நிலையில்தான் மதுரை வடக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தளபதி, காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியை பற்றி காட்டமா பேசிய வீடியோ வைரலாக பரவி பரபரப் பாகிடுச்சு. இதுக்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி, "நான் பிரச்சாரத்துக்கு போனா என் பின்னாடி வர 10 காங் கிரஸ்காரர்கள் கூட இல்லை, அதுக்கும் தி.மு.க.காரர் கள்தான் ஆளு அனுப்பித் தந்ததாகவும், என் கட்சிக்கு கரூரில் பூத் ஏஜென்ட்கூட கிடையாதுன்னும், நான் போற கூட்டத்துக்கு கூட்டமே இல்லை, கொடி கட்டுறதுக்குகூட ஆள் இல்லை... இப்படி ஒண்ணுக்குமே வக்கில்லாமல் ரோட்டு ஓரமாக அலைந்து திரிந்தவளை நாடாளுமன்ற உறுப்பினராக்கி வைத்திருப்பது நாங்கள்தான்னு தி.மு.க. எம்.எல்.ஏ. தளபதிங்கிறவர் என்னை தரம்தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கார். முதல்வர் ஸ்டாலினோட முகத்துக்காகத்தான் பொறுத்துக்கிட்டிருக்கேன், இல்லைன்னா நான் சும்மா விட்டிருக்க மாட்டேன்னு பொரிஞ்சு தள்ளிட்டாங்க.  இரு தரப்பிலும் இந்த கொந்தளிப்பு எப்ப அடங்கும்னே தெரியல.''